தாமரைக்குளம் கண்மாயில் நெகிழிப் பைகள் அகற்றும் முகாம்: கல்லூரி, பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் கண்மாயில் நெகிழிப் பைகள் அகற்றும் மெகா முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் கண்மாயில் நெகிழிப் பைகள் அகற்றும் மெகா முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
       இந்த முகாமுக்கு, ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். 
  விழுதுகள் இளைஞர் மன்றச் செயலர் சங்கிலித்துரை முன்னிலை வகித்தார். தட்சிணாமூர்த்தி அறக்கட்டளை கௌரவத் தலைவர் சரவணன், முகாமைத் தொடக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேயத்தேவன் மற்றும் தேனி நேரு யுவ கேந்திர கணக்காளர் ராம்பாபு ஆகியோர், நீர் மேலாண்மை குறித்து பேசினர்.     இதில், கண்மாய் கரையோரம் 1 கி.மீ. தொலைவுக்கு பரவிக் கிடந்த நெகிழிப் பைகள் உள்ளிட்ட பொருள்கள் அகற்றப்பட்டு, பேரூராட்சி வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. 
     இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், சில்வார்பட்டி மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.       தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கோமதி மற்றும் மருத்துவர் வினிதா தலைமையிலான நடமாடும் மருத்துவக் குழுவினரும் கலந்துகொண்டனர்.     இதற்கான ஏற்பாடுகளை, விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாத்திமா மேரி சில்வியா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.   
  முன்னதாக, சுழற் சங்கத் தலைவர் மணிகார்த்திக் மற்றும் விவசாய சங்கத் தலைவர் வீரபத்திரன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com