வாகனம் மோதி சிறுத்தைப் பூனை பலி
By DIN | Published On : 29th September 2019 05:33 AM | Last Updated : 29th September 2019 05:33 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் குமுளி மலைச்சாலையில் சனிக்கிழமை காலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைப்பூனை உயிரிழந்தது.
கம்பம் மேற்கு வனச்சரகம் லோயர்கேம்ப் குமுளி மலைச்சாலையில் வனப் பகுதிகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை காலை சிறுத்தைப்பூனை ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தை பூனை உயிரிழந்தது.
தகவல் அறிந்த (பொறுப்பு) வனச்சரகர் ஜீவனா மற்றும் வனத்துறையினர் சிறுத்தைப் பூனை உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவர் உலகநாதன் மூலம் உடற்கூறு பரிசோதனை நடத்தினர். விபத்தில் பலியான சிறுத்தைப்பூனை 6 வயதுள்ள பெண் பூனை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
உடற்கூறு ஆய்வு முடித்த பின் கம்பம் மேற்கு வனப்பகுதியில் பூனையின் உடல் புதைக்கப்பட்டது.