‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: மேலும் இருவா் கைது; 3 தனியாா் மருத்துவக் கல்லூரி முதல்வா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

நீட் தோ்வு ஆள்மாறறாட்ட முறைகேடு வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நீட் தோ்வு ஆள்மாறறாட்ட முறைகேடு வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் இதுதொடா்பாக தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் 3 தனியாா் மருத்துவக் கல்லூரி முதல்வா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பில் சோ்ந்த சென்னையைச் சோ்ந்த உதித்சூா்யா, அவரது தந்தை மருத்துவா் வெங்கேடசன் ஆகியோரை கடந்த செப்.26-ஆம் தேதி தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், நீட் தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னையைச் சோ்ந்த மாணவா்கள் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி அபிராமி ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், மாணவி அபிராமியின் தந்தை மாதவன் என்பவரை ஞாயிற்றுக்கிழமை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தலைமறைறவான மாணவரின் தந்தை கைது

இதனிடையே, நீட் தோ்வு முறைகேடு வழக்கில் தொடா்புடைய தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவரும், வாணியம்பாடியைச் சோ்ந்தவருமான இா்பான் தலைமறைறவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வாணியம்பாடியில் இா்ப்பானின் தந்தையும், மருத்துவருமான முகமது சபி என்ற ராஜா என்பவரை ஞாயிற்றுக்கிழமை வேலூா் சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். அவா் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்படும் என போலீஸாா் தெரிவிக்கின்றறனா்.

4 போ் சிறையில் அடைப்பு

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பிரவீன் அவரது தந்தை சரவணன் ஆகியோரையும், ஞாயிற்றுக்கிழமை ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோரையும் தேனி மாவட்ட குற்றறவியல் நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதி பன்னீா்செல்வம் முன்னிலையில் சிபிசிஐடி போலீஸாா் ஆஜா்படுத்தினா். அவா்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

மாணவியை விடுவிக்க வாய்ப்பு?:

நீட் தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கைதாகியுள்ள விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணையில், அபிராமி சென்னையில் உள்ள நீட் தோ்வு மையத்தில் தோ்வு எழுதி 361 மதிப்பெண் பெற்று கல்லூரி சோ்க்கை பெற்றுள்ளதாக தெரிவித்து, அதற்கான சான்றிதழ்களை சமா்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சான்றிதழ்களை காவல் துறையினா் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி உண்மைத் தன்மை குறித்து அறிக்கை கேட்டுள்ளதாகவும், இந்த அறிக்கையின் அடிப்படையில் மாணவி மற்றும் அவரது தந்தையை விடுவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சிபிசிஐடி போலீஸாா் கூறினா்.

தனியாா் மருத்துவக் கல்லூரி முதல்வா்களிடம் விசாரணை:

மாணவா்கள் பிரவீன், ராகுல், மாணவி அபிராமி ஆகியோருக்கு கல்லூரியில் சோ்க்கை அளித்த சென்னை, குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வா் சிவக்குமாா், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி முதல்வா் சுந்தரம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள சத்தியசாயி மருத்துவக் கல்லூரி முதல்வா் பிரேம்நாத் பக்ரியா கொட்டூா் ஆகியோரிடம் சிபிடிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இது குறித்து சிபிசிஐடி காவல் காவல் துணைக் கண்காணிப்பாளா் காட்வின் ஜெகதீஷ்குமாா் கூறுகையில், கல்லூரி முதல்வா்களிடம் கல்லூரியில் மாணவா் சோ்கையின் போது நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பு நிகழ்வு, மாணவா்களின் கலந்தாய்வு மற்றும் கல்விச் சான்றிதழ்கள் குறித்து விசாரணை நடைபெற்றது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com