மஹாளய அமாவாசைசுருளி அருவியில் பக்தர்கள் புனித நீராடல்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை புனித நீராடினர்.


தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை புனித நீராடினர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினமான மஹாளய அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை காலையிலிருந்தே சுருளி அருவியில்  மக்கள் கூட்டம் அலைமோதியது. அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி போன்றவைகளை செய்து வழிபாடு நடத்தினர். மேலும் ஏராளமானோர் அன்னதானம் செய்தனர். பின்னர் அருகில் உள்ள பூதநாராயணசாமி, சுருளிஆண்டவர், கைலாசநாதர்குகை, சுருளிதீர்த்தம், ஆகிய கோயில்களிலும் வழிபாடு நடத்தினர். மேகமலை வன உயிரினசரணாலயம் சார்பில் கிழக்கு வனச்சரகர் ஜீவனா தலைமையில் வனத்துறையினர் மற்றும் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.  
போடி: போடி  பரமசிவன் மலைக்கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவலிங்கப் பெருமானுக்கு மலர்களாலும், மங்கல பொருள்களாலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.      போடி பிச்சங்கரை மலைப் பகுதியில் உள்ள கீழச்சொக்கநாதர், மேலச்சொக்கநாதர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிவபெருமானை வழிபட்டனர்.      
போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சிவலிங்கப் பெருமானுக்கு அலங்காரம் செய்யபப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  இதேபோல் பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் நடைபெற்ற பூஜையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நிலக்கோட்டை: இதே போல் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வந்து வைகையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com