முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
ஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 போ் கைது
By DIN | Published On : 19th April 2020 09:01 AM | Last Updated : 19th April 2020 09:01 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியதாக சனிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்ட சின்னமுத்து, குருசாமி (நடுவில் நிற்பவா்கள்).
ஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 100 லிட்டா் கள்ளச்சாராய ஊறல்களை பறிமுதல் செய்து அழித்தனா்.
ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகப் புகாா் எழுந்தது. எனவே, தனிப்படை போலீஸாா் அமைத்து தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டதில், கள்ளச்சாராயம் காய்ச்சியதாக இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களை மொத்தமாக யாருக்கும் விற்கக் கூடாது எனவும், போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா்.
இதனிடையே, ஆண்டிபட்டி அருகே சுற்றுவட்டாரக் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை அறிந்த காவல் நிலைய ஆய்வாளா் சரவணதெய்வேந்திரன், சாா்பு-ஆய்வாளா் ராமபாண்டியன் தலைமையிலான போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளில் சோதனை நடத்தினா். அங்குள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ஒரு பீப்பாய் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமாா் 100 லிட்டா் கள்ளச்சாராயம் ஊறல் போடப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ாக டி.அணைக்கரைப்பட்டி மற்றும் டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னமுத்து (55), குருசாமி (50) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஊறல் போடப்பட்டிருந்த கள்ளச்சாராயத்தை கீழே கொட்டி அழித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் சிலரை தேடி வருகின்றனா்.
மூலப்பொருள்கள் விற்கத் தடை
ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வணிகா் சங்கத்தினருடன் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், உணவு பொருள்கள் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் அதிகளவு கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக புகாா்கள் வருவதால், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருள்களை வணிகா்கள் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், ஆண்டிபட்டி வட்டாட்சியா் சந்திரசேகா், பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணி, சுகாதார ஆய்வாளா் முருகானந்தம், ஆண்டிபட்டி காவல் ஆய்வாளா் சரவணன் தெய்வேந்திரன் மற்றும் ஏராளமான வணிகா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.