ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில் ஆடி பெருக்கு திருவிழா ரத்து: பக்தர்கள் வருகைக்கு தடை

ஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் கோவில் ஆடி 18ஆம் பெருக்கு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவூற்று வேலப்பர் கோயில்
மாவூற்று வேலப்பர் கோயில்

ஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் கோவில் ஆடி 18ஆம் பெருக்கு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மாவூற்று வேலப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்திரை திருவிழா மற்றும் ஆடி மாத்தில் அமாவாசை மற்றும் ஆடி 18ஆம் பெருக்கு ஆகிய நாள்களில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூட அரசு உத்தரவிட்டது. இதனால் மாவூற்று வேலப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவும்,ஆடி அமாவாசை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆடி 18ஆம் பெருக்கு நாள் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் 18 ம் பெருக்கு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர். தடையை மீறி பொதுமக்கள் கோயிலுக்கு வராத வகையில் காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com