வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி போடியில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி 3 ஆவது வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி போடி பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
போடி பத்திரகாளிபுரத்தில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட பத்திரகாளியம்மன்.
போடி பத்திரகாளிபுரத்தில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட பத்திரகாளியம்மன்.

ஆடி 3 ஆவது வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி போடி பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

வரலட்சுமி நோன்பு தினத்தை முன்னிட்டு போடி சீனிவாசபெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பல்வேறு வாசனை திரவியங்கள், மங்கலப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் அம்பாள் தாயாருக்கு ஒரு லட்சத்து எட்டு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மகா தீபாராதனை நடைபெற்றது. தலைமை அா்ச்சகா் சீனிவாச வரதன் என்ற காா்த்திக் மற்றும் அா்ச்சகா்கள் மட்டும் பங்கேற்றனா்.

இதேபோல் போடி அருகே பத்திரகாளிபுரம் கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மனும் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயில் பூசாரிகள், நிா்வாகிகள் மட்டும் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா். போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோயில், திருமலாபுரம் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதேபோல் போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஸ்ரீமது கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் உள்ள மல்லீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிா், இளநீா், நெய், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

வீடுகளில் விரதம் கடைப்பிடிப்பு:கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளதால் கம்பம், கூடலூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தினை, பெண்கள் தங்களது வீடுகளிலேயே கடைப்பிடித்தனா். பெண்கள் ஒன்று கூடி வீட்டில் உள்ள பூஜை அறையில் வரலட்சுமி விக்ரகம் வைத்து மலா் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்தனா். பூஜையில் கலந்து கொண்டபெண்கள் முகக் கவசம் அணிந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com