தேனி: தற்காலிக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் துணை முதல்வர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி துவங்க உள்ள நிலையில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்துவதற்கான இடத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
தேனி: தற்காலிக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் துணை முதல்வர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி துவங்க உள்ள நிலையில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்துவதற்கான இடத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள தப்புகுண்டு பகுதியில் தமிழக அரசால் புதிதாக அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி 90 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட உள்ளது. இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 40 மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கால்நடை மருத்துவக்கல்லூரி வகுப்புகள துவக்க தற்காலிகமாக கல்லூரி வகுப்புகள் நடத்த உள்ள இடத்தை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்தர், பதிவாளர் ஞானராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

இதனை தொடர்ந்து தமிழக துணை முதல்வர் பெரியகுளத்தில் உள்ள கால்நடை மருதுவமனையை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கால்நடை மருதுவமனையில் புதர் மண்டி சுகாதாரமற்ற முறையில் இருந்ததை கண்டு துணை முதல்வர் அங்கு பணியாற்றிய கால்நடை மருத்துவ அதிகாரிகளை கண்டித்ததோடு நீங்கள் பணியாற்றும் இடங்களை தூய்மையாக வைத்தால் மட்டுமே நீங்களும், வரும் கால்நடைகளுக்கும் சிறந்த மருத்துவம் வழங்க முடியும் என அறிவுரை கூறி உடணடியாக மருத்துவமனையை சுற்றி உள்ள பகுதிகளை தூய்மை படுத்த உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com