கரோனா இறப்பில் சந்தேகம்: சடலத்துடன் உறவினர்கள் தேனியில் சாலை மறியல்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனவால் உயிரிழந்த பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் வைக்கப்பட்ட கரோனா பாதித்தவரின் சடலம்
சாலையில் வைக்கப்பட்ட கரோனா பாதித்தவரின் சடலம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனவால் உயிரிழந்த பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள நல்லகருப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரின் மனைவி நாகலட்சுமி (62).இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கே நாகலட்சுமிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதற்கிடையே அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில்  கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து நாகலட்சுமியின் உடலை அடக்கம் செய்ய சுகாதாரத்துறையினர் நடவடிக்கை  மேற்கொண்டனர்.  

இந்நிலையில் உயிரிழந்த நாகலட்சுமியின் உடலை தகனம் செய்யபோவதாக சுகாதாரத்துறையினரிடம் அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து நாகலட்சுமியின் உடலை  தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உறவினர்களிடம் சுகாதாரத் துறையினர் ஒப்படைத்தனர்.

ஆம்புலன்ஸ் மூலம் உடலை ஏற்றி சென்ற அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தின் வெளியே வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையில் போதுமான சிகிச்சை அளிக்கவில்லை எனவும் மருத்துவர்களுக்கு பதிலாக மருத்துவ மாணவ மாணவிகளே சிகிச்சை அளித்ததாகவும்,  கரோனா பாதிப்பு குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என கூறி உயிரிழந்த நாகலட்சுமியின் உடலில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கவசங்களை அகற்றி தேனி - மதுரை சாலையின் நடுவே சடலத்தை இறக்கி வைத்து வைத்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற  க.விலக்கு போலீஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

 இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் உடலை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தேனி மதுரை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . மேலும் கரோனா பாதித்தவரின் உடலை சாலையில் போட்டு மறியிலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com