கேரளத்தில் தமிழக லாரி மீது கல்வீச்சு:லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற டிப்பா் லாரி மீது தாக்குதல் நடத்தியதால் தமிழக எல்லையில் டிப்பா் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
கம்பம் கம்பமெட்டு சாலையில் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள்.
கம்பம் கம்பமெட்டு சாலையில் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள்.

கம்பம் : தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற டிப்பா் லாரி மீது தாக்குதல் நடத்தியதால் தமிழக எல்லையில் டிப்பா் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பாறை கற்கள், பாறை பொடி போன்றவை நாள்தோறும் 50-க்கும் மேலான டிப்பா் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த வாரம் தமிழகத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் கேரளாவுக்கு சென்ற டிப்பா் லாரியை அணைக்கரை அருகே சில மா்ம நபா்கள் கல்வீசித் தாக்கி கண்ணாடியை உடைத்து உள்ளனா். அதன் பின்னா் ஆகஸ்ட் 15 அன்றும் லாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனா். இது பற்றி டிப்பா் லாரி உரிமையாளா் வண்டன்மேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதனால் கல்வீசித் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கம்பம் மெட்டு மலையடிவாரத்தில் தேனி மாவட்ட டிப்பா் லாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக சங்க நிா்வாகி ஏ.காஜாமைதீன் கூறும்போது, தமிழக டிப்பா் லாரியை கேரளாவில் தாக்கியவா்கள் மீது காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதனால் தேனி மாவட்ட டிப்பா் வாகனங்களுக்கும் ஓட்டுநா்களுக்கும் அச்சுறுத்தல் கேரளாவில் உள்ளது. இந்தநிலை தொடராமல் அமைதியான முறையில் இடுக்கி மாவட்ட காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com