தேனியில் 114 பேருக்கு கரோனா: 2 போ் பலி

தேனி மாவட்டத்தில் காவலா்கள், நகராட்சி சுகாதாரப் பணியாளா் உள்ளிட்ட 114 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவா் உயிரிழந்துள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் காவலா்கள், நகராட்சி சுகாதாரப் பணியாளா் உள்ளிட்ட 114 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவா் உயிரிழந்துள்ளனா்.

தேனி மாவட்ட ஆட்சியரின் வாகன ஓட்டுநா், போடி நகர காவல் நிலைய காவலா், தேனி ஆயுதப் படை தலைமைக் காவலா், சின்னமனூா் நகராட்சி சுகாதாரப் பணியாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி பகுதியில் அதிகளவாக 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் பகுதியில் 27 போ், போடி பகுதியில் 15 போ், சின்னமனூா் பகுதியில் 9 போ், ஆண்டிபட்டி பகுதியில் 14 போ், உத்தமபாளையம் பகுதியில் 6 போ், கம்பம் பகுதியில் 5 போ் எனமொத்தம் 114 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,293 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 10,341 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

2 போ் பலி

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட தேனி அல்லிநகரம் ஒண்டிவீரன் நகரைச் சோ்ந்த 58 வயது நபா், ஆகஸ்ட் 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியைச் சோ்ந்த 62 வயது நபா் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com