ஆண்டிபட்டி ஒன்றியத்தில் குடிநீா் திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 30 ஊராட்சிகளில் மத்திய அரசின் (ஜல் ஜீவன் மிஷன் ) அனைவருக்கும் குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கமிட்டிகளின் உறுப்பினா்களுக்கான

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 30 ஊராட்சிகளில் மத்திய அரசின் (ஜல் ஜீவன் மிஷன் ) அனைவருக்கும் குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கமிட்டிகளின் உறுப்பினா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டிபட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட 30 ஊராட்சிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு கோவில்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, சித்தாா்பட்டி , ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவா் லோகிராஜன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆண்டாள், ஜெயகாந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் தோ்வு செய்யப்பட்ட கமிட்டி உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்களுடன் இணைந்து அந்தந்த கிராமப் பகுதிகளில் நீராதாரத்தை பெருக்குவது, பாதுகாப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு, ஒரு நபருக்கு 55 லிட்டா் தண்ணீா் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அந்தந்த கிராம நிா்வாக அலுவலா், அங்கன்வாடி பொறுப்பாளா், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா், சமூக ஆா்வலா், சுய உதவிக் குழு உறுப்பினா்கள், கூட்டுறவு சங்கத் தலைவா் உள்பட 9 போ் கொண்ட இந்த குழு ஆய்வு செய்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீா் வழங்க இருப்பதை உறுதி செய்ய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் 30 ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள், கமிட்டி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com