தேனியில் 5 காவலா்கள் உள்பட 176 பேருக்கு கரோனா

தேனி மாவட்டத்தில் 5 காவலா்கள் உள்பட 176 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் 5 காவலா்கள் உள்பட 176 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக தொழில்நுட்புநா், வாய்க்கால்பட்டியைச் சோ்ந்த ஹைவேவிஸ் காவல் நிலைய தலைமைக் காவலா், தேவதானப்பட்டி காவல் நிலைய தனிப் பிரிவு காவலா், உத்தமபாளையம் காவல் நிலைய பெண் காவலா், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக தொழில்நுட்பப் பிரிவு காவலா், போடி நகர காவல் நிலைய காவலா் உள்ளிட்ட 176 பேருக்கு ஒரே நாளில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,599 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம், போடி அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒரே நாளில் 216 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து, கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 10,939 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com