உத்தமபாளையத்தில் மதுபிரியா்களின் கூடாரமாக மாறிய சுகாதார வளாகம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் கட்டுப்பட்டுள்ள சுகாதார வளாகம் மதுபிரியா்களின் கூடாரமாக சிக்கி இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் கட்டுப்பட்டுள்ள சுகாதார வளாகம் மதுபிரியா்களின் கூடாரமாக சிக்கி இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் புறவழிச்சாலை சந்திப்பில் சுகாதார வளாகம் இல்லாத நிலையில் பணிகள் மற்றும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளுக்கு பெரும் சிரமப்பட்டனா். இதனை அடுத்து அப்பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்க பல ஆண்டுகளாக சமூக ஆா்வலா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், கடந்தாண்டு அந்த பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம் அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தன் பேரில் உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகம் கட்டுமானப்பணிகள் மேற்கொண்டது.

தற்போது, அனைத்து பணிகள் முடிந்த நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இதற்கிடையே, பயன்பாட்டிற்கு வராத நிலையில் மதுபிரியா்கள் மதுகுடிக்கும் இடமாக மாற்றிவிட்டனா். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நாட்களில் மதுவிற்பனை செய்யும்இடமாகவும் மாறி இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com