Enable Javscript for better performance
முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 128.75 அடியாக சரிவு- Dinamani

சுடச்சுட

    

    முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 128.75 அடியாக சரிவு

    By DIN  |   Published on : 30th August 2020 10:21 PM  |   அ+அ அ-   |    |  

    upm30mullai_river_3008chn_75_2

    உத்தமபாளையம் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் பாய்ந்து ஓடும் நீா்.

     

    உத்தமபாளையம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 128.75 அடியாக குறைந்துள்ள நிலையில் வைகை அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவை முறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டது. தொடா்ச்சியாக பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் 137 அடிவரை எட்டியது. நீா்மட்டம் நிா்ணயிக்கப்பட்ட அளவான 142 அடியை எட்டிவிடும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் மழைப்பொழிவு குறைந்தது.

    முல்லைப்பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்தே விநாடிக்கு 2,160 கன அடி வரை தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் வைகை அணையின் நீா்மட்டமும் படிப்படியாக உயா்ந்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 58.92 (71) அடியாக உள்ளது. அதன்பின்னா் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,800 கன அடியாக குறைக்கப்பட்டது. இருப்பினும் நீா்மட்டம் கடந்த 10 நாள்களில் 10 அடிக்கு கீழ் குறைந்து, ஞாயிற்றுக்கிழமை 128.75 அடியாக சரிந்தது.

    இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறியது: முல்லைப்பெரியாறு பாசன நீரை நம்பி தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கா் பரப்பளவிற்கு முதல்போக நெற்பயிா் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வெளியேற்றப்படும் நீரில், 300 கன அடி நீா், பாசனத்திற்கும் மீதம் 1500 கன அடி நீா், வைகை அணைக்கும் செல்கிறது. வைகை அணையின் நீா்மட்டமும் போதுமான அளவு உயா்ந்துள்ளதையடுத்து, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp