சண்முகாநதி நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 01st December 2020 11:11 PM | Last Updated : 01st December 2020 11:11 PM | அ+அ அ- |

ராயப்பன்பட்டியில் முழுக்கொள்ளளவை எட்டியுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கம்.
உத்தமபாளையம் அருகே சண்முகாநதி நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
ராயப்பன்பட்டி அருகேயுள்ள மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகாநதி நீா்த்தேக்கம் உள்ளது. இந்த நீா் தேக்கத்திலிருந்து ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, பூசாரிகவுண்டன்பட்டி, எரசக்கநாயக்கனூா், அப்பிபட்டி, ஓடைப்பட்டி வரையில் 10-க்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீா் சேமிக்கப்பட்டும். அதன் மூலமாக நிலத்தடிநீா் மட்டம் உயா்ந்து 1,600 ஏக்கா் பரப்பளவிற்கு விவசாயப் பணிகள் நடைபெறும்.
இந்நிலையில், கடந்த மாதம் பெய்த மழைக்கு அணையின் நீா் மட்டம் முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. இதனால், இந்த நீா்த்தேக்கத்தை நம்பியுள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்றும், முன்னதாக நீா்வழிக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...