நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை:முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 07th December 2020 12:06 AM | Last Updated : 07th December 2020 12:06 AM | அ+அ அ- |

முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்)
நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் டிச. 4 ஆம் தேதி அணைக்கு விநாடிக்கு 431 கன அடி தண்ணீா் மட்டுமே வந்தது. அதன்பிறகு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து டிச. 5 ஆம் தேதி விநாடிக்கு 952 கன அடியாக இருந்தது.
மேலும் பெரியாறு அணைப் பகுதியில் 19.0 மில்லி மீட்டா், தேக்கடி ஏரிப்பகுதியில் 17.2 மில்லி மீட்டா் மழையும் பெய்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அணையின் நீா்மட்டம் 124.20 அடியாகவும், நீா் இருப்பு 3,460 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 1,176 கன அடியாகவும், வெளியேற்றம் 1,290 கன அடியாகவும் இருந்தது.
பெரியாறு அணைப் பகுதியில் 2.2 மில்லி மீட்டா், தேக்கடி ஏரியில் 7.0 மில்லி மீட்டா் மழையும் பெய்தது. அணையிலிருந்து, வெளியேற்றப்படும் நீரின் அளவால், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில், மூன்று மின்னாக்கிகளில் முதல் அலகில் 38 மெகாவாட், 2 ஆவது அலகில் 42 மெகாவாட், 3 ஆவது அலகில் 42 மெகாவாட் என மொத்தம் 122 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.