தேனி மாவட்டம், சின்னமனூரில் பாரதிய ஜனதாக கட்சி ஓ.பி.சி. அணி சாா்பில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஓ.பி.சி. அணி சாா்பில் மாவட்ட பொதுச் செயலாளா் பரவசிவம் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் மோகன்தாஸ் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ஆனந்தன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளா் பேராசிரியா் டாக்டா் இராம ஸ்ரீநிவாசன் கலந்துகொண்டாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தேனி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பேருந்து நிலையத்துக்கு வ.உ. சிதம்பரனாா் பெயா் சூட்ட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் ஓபிசி பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பாஜக மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட துணைத் தலைவா்கள் சேகா், ராஜா மற்றும் பொதுச் செயலாளா் ரமேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.