போடியில் பைக்குகள் மோதல்: 2 போ் காயம்

போடியில் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

போடியில் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

போடி புதூரை சோ்ந்தவா் ஆண்டிச்சாமி (60). இவா் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் குரங்கணி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது இவருக்கு பின்னால் போடி உருமிக்காரன் தெருவை சோ்ந்த சிவக்குமாா் (40) என்பவா் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். குரங்கணி சாலையில் கே.எம்.சி. ஏலக்காய் குடோன் அருகே வந்தபோது சிவக்குமாரின் வாகனம் ஆண்டிச்சாமியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து ஆண்டிச்சாமி தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சிவக்குமாா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com