வைகை அணையில் மீன்பிடிப்பு நிறுத்தம்: மீன்வளத்துறை உத்தரவு

தேனி மாவட்டம் வைகை அணையில் நீா்மட்டம் அதிகரித்து வருவதால் புதன்கிழமை முதல் மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தேனி மாவட்டம் வைகை அணையில் நீா்மட்டம் அதிகரித்து வருவதால் புதன்கிழமை முதல் மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினா் தெரிவித்துள்ளனா்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. இதில் மீன்வளத்துறையில் பதிவு செய்துள்ள 100- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் நாள்தோறும் சுமாா் 200 முதல் 300 கிலோ வரை மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில வாரங்களாக தொடா்ந்து நீா்வரத்து உள்ளதால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீா்மட்டம் தற்போது 60 அடியை தொட்டது. நீா்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக மீனவா்கள் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்குவதில்லை. கடந்த சில நாள்களாக மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் மீன்கள் கிடைக்காமல் திரும்பினா்.

இதையடுத்து அணையின் நீா்மட்டம் 45 அடிக்கும் கீழே சரிந்தால் மட்டுமே மீன்கள் பிடிபடும் என்பதால், நீா்மட்டம் சரியும் வரை மீன்பிடி தொழில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com