ஹைவேவிஸ்-மேகமலையில் கடும் பனிப் பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஹைவேவிஸ் - கேமலையில் குளிர்காலம் துவங்கி கடும் பனிப் பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலாப் பயணிளுக்கு புது வகையான அனுபவத்தால் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடும் பனிப் பொழிவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள்.
கடும் பனிப் பொழிவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள்.

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் - கேமலையில் குளிர்காலம் துவங்கி கடும் பனிப் பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலாப் பயணிளுக்கு புது வகையான அனுபவத்தால் மகிழ்ச்சி அடைந்தனர்.

சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் மேகமலை, மணலார், மேல் மணலார், வெண்ணியார், இரவங்கலார், மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் என 7 மலைக்கிராமங்கள் உள்ளன. முழுக்க முழுக்க தேயிலைத்தோட்டங்கள் அமைந்தள்ள பகுதியாகும். இந்த தேயிலைத்தோட்டங்களை சுற்றி அடர்ந்த வனப்பகுதியில் வானுயர்ந்த மரங்கள், யானை, சிறுத்தப்புலி, புலி, கருஞ்சிறுத்தை என பலதரப்பட்ட வனவிலங்கள் வசிப்பிடமாக உள்ளது.

ஹைவேவிஸ் - மேகமலையில் பொது போக்குவரத்து குறைந்த பகுதியாகும். பெரிய அளவிலான கட்டடங்கள் எதுவும் இன்றிமுழுக்க முழுக்க இயற்கை சார்ந்த மலைப்பகுதியாகும். இதனால் பனிப்பொழிவு காலம் என்பதால் வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு இருப்பதாக பொதுமக்கள்தெரிவித்தனர். காலை 10 மணி வரையில் பனிப்பொழிவால் தேயிலைத்தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் நீண்ட நேரமாக பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்து படியே வாகனங்கள் சென்று வருகிறது. 

அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் மழைப்பொழிவு காலங்களில் அதிமான மழைப்பொழிவு இருக்கும். பனிப்பொழிவு காலத்தில் கூடுதல் பனிப்பொழிவு இயல்பாகவே இருக்கும். ஹைவேவிஸ் மலைப்பகுதியில் வரும் சுற்றுலாப்பயணிகள் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலை புது வகையான அனுபவத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலையை உரசிச்செல்லும் மேகக்கூட்டங்கள், பனிப்பொழிவு, இயற்கை அழகு பயணிகள் மிகவும் ரசித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com