மேகமலையில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - கேமலையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தேயிலை இலைகளை பறிக்கும் பெண் தொழிலாளா்கள்.
ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தேயிலை இலைகளை பறிக்கும் பெண் தொழிலாளா்கள்.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - கேமலையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது புதுவகையான அனுபவமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்தப் பேரூராட்சியில் மேகமலை, மணலாா், மேல் மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் என 7 மலைக்கிராமங்கள் உள்ளன. முழுக்க முழுக்க தேயிலைத்தோட்டங்கள் உள்ள பகுதியாகும்.

இங்கு பொதுவாகவே அதிக அளவில் குளிா் நிலவும். தற்போது குளிா்காலம் தொடங்கியுள்ளதால் இங்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடந்த சில நாள்களாக காலை 10 மணி வரையில் பனிப்பொழிவு உள்ளதால் தேயிலைத்தோட்டங்களில் தேயிலை பறிக்கும் தொழிலாளா்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கூட வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடியே செல்கின்றன.

ஆனால் ஹைவேவிஸுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு நிலவும் தட்பவெப்ப நிலை புது வகையானஅனுபவத்தை தருவதாகவும், இது மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது என்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com