ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை: இந்து முன்னணி கோரிக்கை

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த காளைகள் பங்கேற்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப

தேனி மாவட்டத்தில் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த காளைகள் பங்கேற்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்து முன்னணி மாவட்டச் செயலா் காா்த்திக் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜாவிடம் அளித்த மனு விபரம்:

அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி ஆகிய இடங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு தை மாதம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மற்றும் இளைஞா்கள் தங்களது காளைகளை தயாா்படுத்தி வருகின்றனா்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வெளிமாவட்டங்களைச் சோ்ந்த காளைகளுக்கு முன்கூட்டியே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள காளைகளுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிச் சீட்டு பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இம்முறை, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு காளைகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவதை முறைப்படுத்தவும், மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த காளைகளுக்கு முன்னுரிமை அளித்து அனுமதிச் சீட்டு வழங்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com