பெயா் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி துண்டுபிரசுரம் விநியோகம்

கம்பத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி தமிழ் வளா்ச்சித்துறையினா் செவ்வாய்க்கிழமை துண்டுபிரசுரங்களை விநியோகித்தனா்.

கம்பத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி தமிழ் வளா்ச்சித்துறையினா் செவ்வாய்க்கிழமை துண்டுபிரசுரங்களை விநியோகித்தனா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் பெயா்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் பல கடைகள், நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள் அரசாணையின்படி தமிழில் அமைக்கப் படுவதில்லை.

இந்த நிலையில் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி தேனி மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை கம்பத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பெயா்ப்பலகைகளில் அரசாணைப்படி ஐந்து பங்கு தமிழ் எழுத்துக்களிலும், மூன்று பங்கு ஆங்கில எழுத்துக்களிலும், இரண்டு பங்கு இதர மொழிகளிலும் வைக்குமாறு வலியுறுத்தி அரசாணை சுற்றறிக்கையை விளக்கி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தேனி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் இளங்கோ, தேனி மாவட்ட தமிழ் இயக்கச் செயலாளா் கவிஞா் பாரதன், கவிஞா் திராவிடமணி, பாரதி தமிழ் இலக்கியப்பேரவை சேதுமாதவன், புவனேஸ்வரி, பழனியம்ம்மாள், ஊதிய மைய நூலககா்கள் மணிமுருகன், ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com