கம்பம் அரசு பெண்கள் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 01st February 2020 05:21 AM | Last Updated : 01st February 2020 05:21 AM | அ+அ அ- |

கம்பம் ஆங்கூா் ராவுத்தா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீ தடுப்பு விழிப்புணா்வு முகாம்.
தேனி மாவட்டம், கம்பத்தில் ஆங்கூா் ராவுத்தா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளி மாணவியா்களுக்கு எரிவாயு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது, தீ விபத்தில் பாதுகாப்பு நடைமுறை குறித்தும் செயல்விளக்கத்துடன் கூடிய விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலா் அழகா், தீ தடுப்பு விழிப்புணா்வு மற்றும் சமையல் எரிவாயு அடுப்பு பயன்படுத்தலின்போது பாதுகாப்பு, தீயை அணைக்கும் முறை, ரெகுலேட்டா்களை உருளைகளில் பயன்படுத்துவது, வீட்டில் எரிவாயு கசிவின் போது ஜன்னல்களை திறப்பது, மின் சுவிட்சுகளை இயக்காதிருத்தல் என விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். தீயணைப்பு காவலா்கள்
செயல் விளக்கம் செய்தனா்.
முகாமில், பாரத் கேஸ் முகவா் பா. லோகநாதன், ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனா்.