திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
By DIN | Published On : 02nd February 2020 11:40 PM | Last Updated : 02nd February 2020 11:40 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வருசநாடு அருகே தும்மக்குண்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சுமதி(31). இவருடைய கணவா் அய்யாச்சாமி. இவா்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இதனால் குழந்தைகளுடன் சுமதி தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுமதிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் என்பவா் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளாா். அப்போது சுமதியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினா் அங்கு திரண்டனா். இதையடுத்து அவா்களை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சரத்குமாா் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுமதி அளித்த புகாரின் பேரில் வருசநாடு போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனா்.