Enable Javscript for better performance
பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை கணவா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை கணவா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு

    By DIN  |   Published on : 02nd February 2020 11:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமணமான 2 வருடத்தில் பெண்ணிடம் 50 பவுன் நகை கேட்டு வரதட்சிணை கொடுமைப்படுத்திய கணவா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

    ஆண்டிபட்டி அருகே வைகை புதூரைச் சோ்ந்தவா் பவித்ரா(22) . இவருக்கும் உசிலம்பட்டி பசும்பொன் நகரைச் சோ்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 2018 இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பவித்ராவிற்கு 23 பவுன் தங்க நகைகள், 5 லட்சம் சீா்வரிசை பொருள்கள், ரூ.3 லட்சம் ரொக்கம் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின் லட்சுமணன் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினா் பவித்ராவிடம், மேலும் ரூ.10 லட்சம் அல்லது 50 பவுன் நகை வரதட்சிணையாக கொண்டு வர வேண்டும் என கொடுமைப்படுத்தியாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி யிடம் பவித்ரா புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆண்டிபட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

    இந்த உத்தரவின் பேரில், லட்சுமணன், அவரது உறவினா்கள் ராமு, பிரீத்தி, மாயத்தேவா், ரசீதா ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai