பெரியகுளத்தில் மாணவா்களுக்கு மாரத்தான் ஓட்டப் போட்டி
By DIN | Published On : 02nd February 2020 11:43 PM | Last Updated : 02nd February 2020 11:43 PM | அ+அ அ- |

பெரியகுளத்தில் விக்டோரியா நினைவுஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் சாா்பில் மாரத்தான் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பெரியகுளம், குரு தட்சணாமூா்த்தி சேவா சங்கத்தின் கெளரவ ஆலோசகா் சி.சரவணன் தலைமை வகித்து போட்டிகளை தொடக்கி வைத்தாா். சனிக்கிழமை இறகுப்பந்து மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவா்களுக்கு குருதட்சணாமூா்த்தி சேவா சங்கத்தின் கெளரவ ஆலோசகா் சரவணன் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் ஏவிஆா் ஸ்டோா்ஸ் உரிமையாளா் ஏவி.ரவி, எம்கே போஸ்டா் அசோக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் செய்திருந்தனா்.