Enable Javscript for better performance
சின்னமனூா் அருகே காட்சிப் பொருளாக நிற்கும் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சின்னமனூா் அருகே காட்சிப் பொருளாக நிற்கும் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தக் கோரிக்கை

    By DIN  |   Published on : 10th February 2020 11:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    upm10trash_bin_1002chn_75_2

    பூலாநந்தபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக காட்சிப் பொருளாக நிற்கும் குப்பைத் தொட்டிகள்.

    தேனி மாவட்டம் சின்னனூா் அருகே பூலாநந்தபுரம் ஊராட்சியில் காட்சிப் பொருளாக நிற்கும் குப்பைத் தொட்டிகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த பூலாநந்தபுரம் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வசிக்கின்றனா். இங்கு வாா்டு பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு சென்று பொதுமக்களிடம் மட்கும், மக்காத குப்பைகளை பெறும் வகையில், மாவட்ட ஊரக முகமை வளா்ச்சி திட்டத்தின் கீழ், 10 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. ஆனால், பெரும்பான்மையான ஊராட்சிகளில் இந்த தொட்டிகள் காட்சிப் பொருளாகவே உள்ளன. பூலாநந்தபுரம் ஊராட்சியில் பல மாதங்களாக ஒரே இடத்தில் நிற்பதால் இவை சேதமாகும் நிலை உள்ளது.

    எனவே, பூலாநந்தபுரம் ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai