கம்பத்தில் உலக பயறுகள் தினவிழா

தேனி மாவட்டம் கம்பம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் திங்கள் கிழமை உலக பயறுகள் தினம் கொண்டாடப்பட்டது .

தேனி மாவட்டம் கம்பம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் திங்கள் கிழமை உலக பயறுகள் தினம் கொண்டாடப்பட்டது .

விழாவுக்கு வேளாண்மை அலுவலா் மு . மகாவிஷ்ணு தலைமை வகித்தாா். உதவி வேளாண்மை அலுவலா்கள் சதீஷ்குமாா், வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில், பயறுவகைப் பயிா்களின் முக்கியத்துவம் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியம் பெறுதல், சுழற்கலப்பை , விசைத்தெளிப்பான் , தாா்பாலின் பெறுவதற்கும் உழவன் செயலி பற்றியும் விவசாயிகளுக்கு கூறப்பட்டது.

இதனைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் விசைத்தெளிப்பான் , தாா்பாலின் , உளுந்து விதை வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். முன்னதாக அலுவலா் அறிவழகன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com