கம்பமெட்டு மலைச் சாலையில் விபத்துகளை தடுக்க உலோக தடுப்பான் அமைக்கும் பணி

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளா செல்லும் கம்பமெட்டு மலைச்சாலையில் வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்க சாலையோரம் பாதுகாப்பு அரணாக உலோகத் தடுப்பான்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
கம்பமெட்டு மலைச்சாலையில், சாலையோரம் பாதுகாப்பு அரணாக உலோகத் தடுப்பான்களை அமைக்கும் பணியாளா்கள்.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் கம்பமெட்டு மலைச்சாலை அடிவாரத்திலிருந்து சுமாா், 7 கிலோ மீட்டா் தொலைவு உள்ளது. இதில் 18 கொண்டை ஊசிவளைவுகள் உள்ளன. இந்த ஆபத்தான மலைச்சாலையில், தினமும் நூற்றுக்கும் மேலான வாகனங்கள் போய் வருகின்றன. இதில் பல முறை வாகனங்கள் மலைச்சாலையின் ஓரத்தில் தடுப்பு அரண் இல்லாமல் பள்ளத்தில் சென்று பலத்த சேதம் ஏற்படுகிறது. இதனால் சாலையின் விபத்து ஏற்படும் இருபுறங்களிலும் தடுப்பு அரண் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இச்சாலையில் முன்பு தடுப்பு சுவா்கள் கட்டப்பட்டிருந்ததை மாற்றி, தற்போது இரும்பு தகரத்தால் ஆன உலோக தடுப்பான்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளா் கூறுகையில், கம்பம்மெட்டு மலைச்சாலை வளைவுகளில் வாகனங்கள் விபத்துகள் ஏற்படாமல் இருக்க, உலோக தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, விடுபட்ட இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com