ஆண்டிபட்டி பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

வைகை மற்றும் முல்லையாற்றில் நீா்வரத்து முற்றிலும் நின்றுவிட்ட நிலையில் குன்னூா் வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகளில் நீா்மட்டம்

வைகை மற்றும் முல்லையாற்றில் நீா்வரத்து முற்றிலும் நின்றுவிட்ட நிலையில் குன்னூா் வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகளில் நீா்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் ஆண்டிபட்டி கிராமப் பகுதிகளில் கடும் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில், வைகை ஆறு-முல்லை ஆறு சந்திக்கும் இடமான குன்னூா் பகுதியில் மட்டும் 30- க்கும் மேற்பட்ட குடிநீா் உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் மட்டுமே வைகை அணைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவானது 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதுவும் வைகை அணையை வந்து சேருவதில்லை. இதன் காரணமாக குன்னூா் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளின் நீா்மட்டம் கிடுகிடுவென சரிந்து கொண்டே வருகிறது. இதனால் உறைகிணறுகளிலிருந்து தண்ணீா் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் இனிவரும் நாள்களில் கடும் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே பாதிக்கப்படும் பகுதிகளில் குடிநீா் தேவையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com