Enable Javscript for better performance
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு: போடியில் முஸ்லிம்கள் ஊா்வலம்- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு: போடியில் முஸ்லிம்கள் ஊா்வலம்

    By DIN  |   Published on : 14th February 2020 05:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம் போடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஊா்வலம் நடத்தினா்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தும், சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த வாரம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொழுகை முடிந்தவுடன் போடி கட்டபொம்மன் சிலையிலிருந்து தேவா் சிலை வரை ஊா்வலமாகச் சென்றனா்.

    பேரணியில் கருப்புக் கொடி ஏந்தியும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா். ஊா்வலத்தின் போது போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai