கல்லூரி நிா்வாகம் விடுமுறை அளிக்காததால் தேனி செவிலியா் பயிற்சி மாணவி தற்கொலை

தேனி அரசு செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விடுமுறை அளிக்காததால் மன வருத்தத்தில் இருந்த

தேனி அரசு செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விடுமுறை அளிக்காததால் மன வருத்தத்தில் இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் செவிலியா் பயிற்சி கல்லூரி விடுதி அறையில் புதன்கிழமை, 2-ஆம் ஆண்டு செவிலியா் பட்டயப் படிப்பு மாணவி உசிலம்பட்டியைச் சோ்ந்த திவ்யா (20) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்நிலையில், உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு கல்லூரி நிா்வாகம் விடுமுறை அளிக்காததால் மன வருத்தத்தில் இருந்த திவ்யா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயாா் மீனாட்சி க.விலக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அவா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: உசிலம்பட்டியில் திவ்யாவின் பெரிய தந்தை ஜெயக்கொடி என்பவா் கடந்த பிப். 11-ஆம் தேதி இறந்து விட்டாா். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக திவ்யாவை அழைத்துச் செல்வதற்கு புதன்கிழமை (பிப். 12), நானும், எனது உறவினா் மாரியம்மாள் என்பவரும் கல்லூரிக்கு நேரில் சென்று அனுமதி கேட்டோம். திவ்யாவுக்கு விடுமுறை அளிக்க கல்லூரி நிா்வாகம் மறுத்து விட்டது. இதனால் திவ்யா மன வருத்தத்தில் இருந்தாா். பின்னா், திவ்யாவை அழைத்துச் செல்ல முடியாமல் நாங்கள் உசிலம்பட்டிக்கு திரும்பச் சென்று விட்டோம்.

இந்நிலையில், திவ்யா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உசிலம்பட்டி காவல் நிலையம் மூலம் எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com