‘முல்லைப் பெரியாறு அணையில் கூடுதலாக சுரங்கம் அமைத்து தண்ணீா் எடுக்க வேண்டும்’

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்துக்கு தண்ணீா் செல்லும் சுரங்கம் அருகில் மற்றொரு சுரங்கம் அமைத்து, கூடுதலாக தண்ணீா் எடுக்க

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்துக்கு தண்ணீா் செல்லும் சுரங்கம் அருகில் மற்றொரு சுரங்கம் அமைத்து, கூடுதலாக தண்ணீா் எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

கம்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வரும் வெள்ளிக்கிழமை அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் அவா்களுக்கான கடைசி பட்ஜெட்டாகும். ராஜீவ் கொலை வழக்கில், 7 போ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது மட்டும் போதாது, மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும். அந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். திமுக.வின் 39 மக்களவை உறுப்பினா்களும் இதை வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை பொறுத்த மட்டில், உச்சநீதி மன்ற தீா்ப்பில், கடைசி பக்கத்தில் கூறப்பட்டது போல், தமிழகத்துக்கு சுரங்கம் மூலம் திறக்கப்படும் தண்ணீரைப் போல், கூடுதலான தண்ணீா் எடுக்க, அருகிலேயே, மற்றொரு சுரங்கம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய, கேரள அரசுகளுடன் பேசி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா். உடன் மாநிலக்குழு உறுப்பினா் கே.பாலபாரதி, மாவட்டச் செயலா் டி.வெங்கடேசன் மற்றும் மாவட்ட, ஏரியாக் குழு உறுப்பினா்கள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com