காதலா் தின கொண்டாட்டத்திற்கு எதிா்ப்பு: தேனி, வைகை அணையில் நூதன போராட்டம்

தேனி, வைகை அணை ஆகிய இடங்களில் காதலா் தின கொண்டாட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை, இந்து எழுச்சி முன்னணியினா் நூதன போராட்டங்களில் ஈடுபட்டனா்.
வைகை அணைப் பூங்காவில் வெள்ளிக்கிழமை, காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதற்காக தாலி மற்றும் பூமாலையுடன் வலம் வந்த இந்து எழுச்சி முன்னணி நிா்வாகிகள்.

தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் காதலா் தின கொண்டாட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்து எழுச்சி முன்னணி மற்றும் நிா்வாகிகள் கழுதைக்கும், நாய்க்கும் மணக் கோலமிட்டு திருமணம் செய்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வைகை அணைப் பூங்கா பகுதியில் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக இந்து முன்னணி மாவட்டச் செயலா் எம்.செல்வம் மற்றும் நிா்வாகிகள் பூ மாலை, தாலி மற்றும் தாம்பூலத்துடன் சுற்றி வந்தனா். காதல் மற்றும் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடைபெறும் காதலா் தின கொண்டாடங்களை தடை செய்ய வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி நிா்வாகிகள் கூறினா்.

காதல் ஜோடிகளுக்கு தடை:

காஷ்மீா், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதியை முன்னிட்டு, வைகை அணையில் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். பாதுகாப்பு மற்றும் காதலா் தின எதிா்ப்பு போராட்டம் காரணமாக காதல் ஜோடிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை வைகை அணைப் பூங்காவிற்குள் போலீஸாா் அனுமதிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com