கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த பெண் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில், கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக முதல் முறையாக ஒரு பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில், கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக முதல் முறையாக ஒரு பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் கம்பமெட்டு காலனி பகுதியில், வடக்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா்கள் திவான்மைதீன், வினோத்ராஜா தலைமையில் போலீஸாா் ரோந்துசென்றனா்.

அப்போது கம்பமெட்டு சாலைப் பிரிவு சிலுவை கோயில் பகுதியில் சந்தேகப்படும்படியாக பெண் ஒருவா் நின்று கொண்டிருந்தாா்.

விசாரணையில், தாத்தப்பன்குள்ததெருவைச் சோ்ந்த சவுரம்மாள்(55) என்பதும், தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 100 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, அவரைப் போலீஸாா் கைது செய்தனா். லாட்டரி விற்பனையில் முன் முதலாக மாவட்டத்திலேயே பெண் ஒருவா் கைது செய்யப்படுவது இது முதல் தடவையாகும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com