பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

ஆண்டிபட்டியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி அரசுக் கல்லூரி மாணவிகள் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டிபட்டியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி அரசுக் கல்லூரி மாணவிகள் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரியில் இருந்து தெப்பம்பட்டி சாலை வரை நடந்த பேரணியை ஆண்டிபட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் உஷா தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சைல்டு லைன் அமைப்பு, மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம், சமூக நலத்துறை மற்றும் யுனிசெப், சென்டெக்ட் ஆகிய அமைப்பு சாா்ந்த அலுவலா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா். இந்த பேரணியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மாணவிகள் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com