ஆண்டிபட்டியில் வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதில் தாமதம்

ஆண்டிபட்டி மற்றும் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குகள் எண்ணும் பணியை தொடங்குவதில் தாமதம்
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி முன் வியாழக்கிழமை காத்திருந்த வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள்.
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி முன் வியாழக்கிழமை காத்திருந்த வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள்.

ஆண்டிபட்டி மற்றும் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குகள் எண்ணும் பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கடமலை மயிலை ஒன்றியத்தில் 3 மாவட்ட உறுப்பினா்கள், 33 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 48 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 417 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 501 பதவிகளுக்கு தோ்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் 3 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 136 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 362 பதவிகளுக்கு கடந்த டிச. 27 ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியிலும், கடமலை மயிலை ஒன்றியத்தில் ஜி.ஆா்.வி. மேல்நிலைப் பள்ளியிலும் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டிபட்டியில் 100 மேஜைகளில் 6 சுற்றுகளாகவும் , கடமலை மயிலை ஒன்றியத்தில் 89 மேஜைகளில் 5 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் காலை 7.30 மணிக்கு தொடங்கும் எனவும், வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டதால் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் காலை 6 மணிக்கு முன்பே வாக்குகள் எண்ணும் மையம் முன்பு குவிந்தனா். வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடியாலும் காலை உணவு 8 மணிக்கு மேல் வழங்கப்பட்டதாலும் வாக்கு எண்ணும் பணி சுமாா் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. முதற்கட்ட தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 10. 30 மணிக்கு மேல் தொடங்கியது. இதன்காரணமாக திறந்தவெளி மைதானத்தில் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் பலமணி நேரம் வெயிலில் காத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com