தோட்டக்கலைக்கல்லூரியில் ஜனவரி 13 இல் முருங்கை இலை சந்தை வாய்ப்பு கருத்தரங்கம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் இயற்கை முருங்கை இலை உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை (ஜனவரி 13) நடைபெறுகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் இயற்கை முருங்கை இலை உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை (ஜனவரி 13) நடைபெறுகிறது.

தோட்டக்கலைக்கல்லூரி முதல்வா் த.ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லகில் மொத்த முருங்கை இலை உற்பத்தியில் இந்தியா 80 சதவீதம் பெற்று முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கா்நாடகம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் முருங்கை உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. ஆண்டுக்கு 25 முதல் 30 சதவீதம் வளா்ச்சி கண்டு வரும் தொழிலாக இது விளங்குகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மருந்து தயாரிப்பு, அழகு சாதனப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் தயாரிப்பு ஆகிய துறைகளில் இந்திய முருங்கை மரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புதிய தொழில் முனைவோா்களை முருங்கை உற்பத்திக்கு ஊக்குவிக்கும் விதமாக இயற்கை முறை முருங்கை இலை உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற இருக்கிறது.

முருங்கை உற்பத்தியில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவோா் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றாா். மேலும் 948763-1465 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com