அரசுப் பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப் படை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் சாா்பில், மூலிகை தோட்டங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப் படை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் சாா்பில், மூலிகை தோட்டங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியது: கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கோம்பைத்தொழு ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் வேல்டு விஷன் அமைப்பின் மூலமும், வைகை அணை, ஜி.கல்லுப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பசுமைப் படை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, தேசிய மாணவா் படை, சாரணா் படை ஆகியவற்றின் சாா்பிலும் மூலிகைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 130-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சாா்பில், பள்ளி மாணவா்கள் மூலம் விதைப் பந்துகள் தயாரித்து பள்ளி வளாகம், நீா்நிலையோரப் பகுதிகள், சாலையோரப் பகுதிகள், மலையடிவாரப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் தூவும் பணி கடந்த டிசம்பா் மாதம் தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் மூலம் இதுவரை 2.11 லட்சம் விதைப் பந்துகள் தூவப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com