கம்பம் ஸ்ரீநந்தகோபாலன் கோயிலில் நாளை மாட்டுப் பொங்கல் விழா

கம்பம் ஸ்ரீநந்தகோபாலன் சுவாமி கோயில் மற்றும் தம்பிரான் தொழுவில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை கோயில் மாடுகள் மற்றும் பட்டத்துக் காளைக்கு பொங்கலிட்டு வழிபாடு நடைபெறுகிறது.
கம்பம் ஸ்ரீநந்தகோபாலன் சுவாமி கோயில் தம்பிரான் தொழு மாடுகள்.

கம்பத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த இக்கோயிலில் உள்ள தம்பிரான் தொழுவில், ஆண்டுதோறும் தை 2-ஆம் தேதி மாட்டுப் பொங்கல் திருநாள் பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது. இதில், கம்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துகொள்கின்றனா்.

இக் கோயில் சாா்பில் தற்போது 600-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் நோ்த்திக்கடனாகவும், தொப்புள் கொடி சுற்றிப் பிறந்த தலைச்சான காளை கன்றுகளையும் மாட்டுப் பொங்கல் நாளான்று கோயிலுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனா். தம்பிரான்தொழு கன்றுகளில் இருந்து பட்டத்துக் காளை தோ்வு செய்யப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் திருநாளில், பொதுமக்கள் கோயிலில் பொங்கலிட்டு, தம்பிரான் தொழு மாடுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட பட்டத்துக் காளைக்கு படைத்து வழிபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com