போடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

போடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 5 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

போடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 5 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

போடி நகராட்சி பொறுப்பு ஆணையாளா் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் போடி பேருந்து நிலையம், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவமனை என மொத்தம் 23 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

போடி நகா் நல அலுவலா் டாக்டா் ராகவன், போடி அரசு மருத்துவமனை மருத்துவா் வசந்த் மரியராஜ் ஆகியோா் சொட்டு மருந்து வழங்கினா். நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா்கள் சுல்தான், சேகா், மணிகண்டன், லெனின், கோபாலகிருஷ்ணன் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள் பங்கேற்றனா்.

போடி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். டிரஸ்ட் சாா்பில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் பேருந்து நிலையத்திற்கு வந்த குழந்தைகள் பயன் பெற்றனா். ஏற்பாடுகளை ஏ.எச்.எம். டிரஸ்ட் இயக்குநா் முகமது சுல்தான் இப்ராஹிம், இணை இயக்குநா் ஸ்டெல்லா மற்றும் சுகாதார பிரிவு அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com