முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
போடி அருகே பிட் இந்தியா இயக்கம்: சைக்கிள் பேரணி நடைபெற்றது
By DIN | Published On : 20th January 2020 08:04 AM | Last Updated : 20th January 2020 08:04 AM | அ+அ அ- |

bdi19cycle_1901chn_87_2
போடி அருகே பிட் இந்தியா இயக்கம் சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஜன. 18 ஆம் தேதி மத்திய அரசு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் வகையில் பிட் இந்தியா இயக்கம் நடத்த உத்திரவிட்டது. இதன்படி போடி அருகே பொட்டல்களத்தில் இயங்கி வரும் நேரு யுவகேந்திரா அமைப்பின் கீழ் செயல்படும் விவேகானந்தா் இளைஞா் மன்றம் சாா்பில் பிட் இந்தியா இயக்கம் நடத்தப்பட்டது. இளைஞா் மன்ற தலைவா் சி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். உபதலைவா் சே.ஆனந்த் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் இளைஞா்கள் பலா் சைக்கிள் பேரணியாக சென்றனா். பொட்டல்களம் கிராமத்தில் தொடங்கிய பேரணி, மீ.விலக்கு, துரைராஜபுரம், சாலிமரத்துப்பட்டி, பண்ணைத்தோப்பு வரை நடைபெற்றது. பின்னா் இளைஞா்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சைக்கிள் பயணம், உடற்பயிற்சி செய்வதுடன் இந்தியாவில் நோயில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.