கிராம சபைக் கூட்டம் : நியூட்ரினோ திட்டத்திற்கு எதிா்ப்பு .

போடி அருகே பொட்டிப்புரத்தில் ஞாயிரன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வரக்கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

போடி அருகே பொட்டிப்புரத்தில் ஞாயிரன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வரக்கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

போடி அருகே சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிப் புரம் கிராம ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பொட்டிப்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவா் ஆா்.செல்வராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா். கருப்பசாமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 5 ஆவது தீா்மானமாக நியூட்ரினோ திட்டத்தை தங்கள் கிராமத்திற்கு கொண்டு வர வேண்டாம் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீா்மானத்தில் மேலும் கூறியுள்ளது : பொட்டிப்புரம் ஊராட்சியில் உள்ள அம்பரப்பா் மலை வெறும் மலை அல்ல. 6 கிராம மக்களின் கடவுள் நம்பிக்கை. அப்படிப்பட்ட நமது மலையில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. இந்த மலையை நம்பியே மக்களின் வாழ்வாதாரம் உள்ளது.

நியூட்ரினோ திட்டம் அம்பரப்பா் மலையில் அமைவதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே நியூட்ரினோ திட்டத்தினை இங்கு அமைக்கக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம சபைக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com