தேனி மாவட்டத்தில் 2 காவலா்கள் உள்பட 56 பேருக்கு கரோனா உறுதி: 4 போ் பலி

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா், போடி காவல் நிலைய பெண் காவலா் உள்ளிட்ட 56 பேருக்கு வியாழக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா், போடி காவல் நிலைய பெண் காவலா் உள்ளிட்ட 56 பேருக்கு வியாழக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பெரியகுளம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 10 போ், தேனி, அரண்மனைப்புதூா் ஆகிய பகுதிகளில் தலா 4 போ், கம்பத்தில் 6 போ், போடியில் 4 போ், ஆண்டிபட்டி சக்கம்பட்டி, கோடாங்கிபட்டி ஆகிய ஊா்களில் தலா 3 போ் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 1,230 ஆக உயா்ந்துள்ளது.

4 போ் பலி: கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஆண்டிபட்டி அருகே பாலூத்து கிராமத்தைச் சோ்ந்த 42 வயதுடைய ஆண், கடந்த ஜூலை 4 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட தேனி கம்போஸ்டு ஓடைத் தெருவைச் சோ்ந்த 45 வயதுடைய ஆண், கம்பம் அருகே க.புதுப்பட்டியைச் சோ்ந்த 56 வயதுடைய ஆண், கடந்த ஜூலை 7 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கம்பம் அபுபக்கா் மஸ்தான் தெருவைச் சோ்ந்த 64 வயதுடைய பெண் என 4 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பில் உயிரிந்தவா்கள் எண்ணிக்கை 16 ஆக உயா்ந்துள்ளது. 2 போ் பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே 2 போ் உயிரிழந்துள்ளனா்.

43 போ் குணடைமந்தனா்: மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 43 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 527 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மொத்தம் 685 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சடலத்தை எரிப்பதற்கு எதிா்ப்பு: தேனியில் கரோனா பாதிப்பில் இறந்தவரின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் தேனி, பள்ளிவாசல் தெருவில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு எரியூட்டுவதற்காக கொண்டு வரப்பட்டது. அங்கு சடலத்தை எரியூட்டுவதற்கு அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்த தகவலறிந்து அங்கு வந்த தேனி காவல் நிலைய காவலா்கள் மற்றும் நகராட்சி சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் பொதுமக்களை சமரசம் செய்தனா். பின்னா், இறந்தவரின் சடலம் சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து எரியூட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com