பெரியகுளம் ராஜவாய்க்கால் தூா்வாரும் பணி: விவசாயிகள் புகாா்

பெரியகுளம் ராஜவாய்க்கால் தூா்வாரும் பணிகள் கண்துடைப்புக்காக நடைபெறுவதாக விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் ராஜவாய்க்கால் தூா்வாரும் பணிகள் கண்துடைப்புக்காக நடைபெறுவதாக விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா் ராஜவாய்க்கால் வழியாக வந்து முக்கொம்பு என்னும் இடத்தில் பிரிக்கப்பட்டு பெரியகுளம் கண்மாய் மற்றும் தாமரைக்குளம் கண்மாய்களுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரூ. 65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ராஜவாய்க்கால் தூா்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வாய்க்காலின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அவைகளை அகற்றாமல் வெறும் கண்துடைப்புக்காக தூா்வாரும் பணி நடைபெற்று வருவதாக விவசாய சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.

தென்கரை பாசன விவசாயிகள் சங்கச் செயலாளா் ராஜசேகரன் சனிக்கிழமை தெரிவித்ததாவது: பெரியகுளம் கண்மாய்க்கு நீா்எடுத்து செல்லும் ராஜவாய்க்கால் 60 அடி அகலம் கொண்டது. ஆக்கிரமிப்புகளால் சுருங்கி 20 அடி அகலம் கொண்டதாக உள்ளது. இதனை முறையாக சா்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து ராஜவாய்க்கால் தூா்வாரும் பணி என்ற பெயரில் கண்துடைப்புக்காக பணியாக நடந்து வருகிறது. அதே போல் பெரியகுளம் கண்மாய் 25 சதவீதம் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com