முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
ஆண்டிபட்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th July 2020 02:01 PM | Last Updated : 14th July 2020 02:01 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஜனநாயகம், கூட்டாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட முக்கிய பாடப் பிரிவுகளை நீக்க கூடாது. கரோனா நோய்த்தொற்றின் அச்சம் குறையாத சூழலில் பல்கலை, கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு நடத்தியே ஆகவேண்டும் என்கிற முடிவினைத் திரும்பப் பெறவேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கியதைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.