முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
உத்தமபாளையத்தில் தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th July 2020 02:42 PM | Last Updated : 14th July 2020 02:42 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் ரவி தலைமை வகித்தார் செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தார், பொருளாளர் கண்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், வரலாறு காணாத டீசல் உயர்வை கண்டித்தும், பேரிடர் கால சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஓட்டுநர்களுக்கு பேரிடர் கால நலத்திட்ட உதவி வழங்க வலியுறுத்தியும், ஓட்டுநர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் பேரிடர் இழப்பு வழங்கிடவும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், போக்குவரத்து காவல்துறையின் பொய்யான வழக்குகளை கண்டித்தும், பழைய வாகனங்களின் உரிமைகளை ரத்து செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.