போடியில் வறுமை காரணமாக மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் தற்கொலை 

போடியில் வறுமையின் கொடுமை காரணமாக மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் தற்கொலை
மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் தற்கொலை

போடியில் வறுமையின் கொடுமை காரணமாக மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி நாகலட்சுமி (60). இவர்களுக்கு தமிழ்செல்வி, ரெங்கராஜ் (38), அழகர்ராஜா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். தமிழ்செல்விக்கும், அழகர்ராஜாவுக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். ரெங்கராஜ் மாற்றுத்திறனாளி ஆவார். இவரை ரத்தினசாமியும், நாகலட்சுமியும் பராமரித்து வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ரத்தினசாமிக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

கரோனா பொதுமுடக்கும் சேர்ந்து கொண்டதால் இவர்கள் வருமானமின்ற மிகுந்த இன்னலுக்கு ஆளாயினர். தனது மகனையும், கணவனையும் காப்பாற்ற நாகலட்சுமி தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்தார். வியாபாரம் இல்லாததால் காய்கறிகள் அழுகி நட்டத்தை தந்தது. கடன் வாங்கி வியாபாரம் செய்ததில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தனர். வறுமையில் மிகுந்த சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளான நாகலட்சுமி திங்கள் கிழமை வங்கிக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. 

இதனால் அக்கம் பக்கத்தினர் அவர்களை தேடியபோது வீட்டின் பின் பக்கம் இருந்த காட்டுப் பகுதியில் நாகலட்சுமி இவரது மகன் ரெங்கராஜ் உடன் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரிந்தது. இதனையடுத்து போடி டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காவல்துறையினர் இரண்டு பேரின் சடலங்களை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வறுமையின் கொடுமை காரணமாக மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com